இலங்கையில் நேற்று (26) கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட 07 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் இலங்கையில் மொத்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 672,150 ஆக உள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளான 2 பேர் சமீபத்தில் உயிரிழந்துள்ளதாகவும், 24 பேர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தொற்று நோய் பிரிவு நேற்று (26) உறுதிப்படுத்தியுள்ளது.
கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 655,285 ஆகும்.
இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என்பதால், இந்த நிலையில் சுகாதார ஆலோசனைகளை தொடர்ந்து பின்பற்றுமாறு சுகாதாரத்துறை மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
கடந்த காலங்களில் போன்று கொவிட் அறிவுறுத்தல்களை முறையாக பின்பற்றினால், இதனை முறியடிக்க முடியும் என சுகாதாரத்துறை வலியுறுத்துகிறது.