பாடசாலை வாகனங்களுக்கான கட்டணம் குறைப்பு ; முச்சக்கர வண்டி கட்டணத்தில் திருத்தம் இல்லை!

Date:

எரிபொருள் விலை திருத்தம் இடம்பெற்றிருந்தாலும் முச்சக்கர வண்டி கட்டண குறைப்பு குறித்து பரிசீலிக்க முடியாது என தேசிய கூட்டு முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் கைத்தொழில் தொழிலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஒக்டேன் 92 ரக பெற்றோல் விலை 7 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள போதிலும் முச்சக்கர வண்டி கட்டணத்தில் திருத்தங்களை மேற்கொள்ள முடியாது. அண்மையில் முச்சக்கர வண்டி கட்டணத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதால் இம்முறை மேற்கொள்ள முடியாதென முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கங்கள் கூறியுள்ளன.

குறைக்கப்பட்ட எரிபொருள் விலையுடன் பாடசாலை வேன் கட்டணத்தை குறைக்கவுள்ளதாக அகில இலங்கை பாடசாலை வாகன ஓட்டுநர்கள் சங்கத்தின் தலைவர் மல்சிறி டி சில்வா தெரிவித்துள்ளார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியால் பெற்றோர் சோர்ந்து போயுள்ளதால், சமீபத்திய எரிபொருள் விலைக் குறைப்பின் பலனை நாங்கள் அவர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...