இலங்கைக்கு மேலும் கடன் சலுகை வழங்க இந்தியா இணக்கம்

0
227

இலங்கைக்கான ஒரு பில்லியன் டொலர் கடன் சலுகையை மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்க இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது.

கடுமையான பொருளாதார நெருக்கடியின் போது இலங்கைக்கு வழங்கப்பட்ட 4 பில்லியன் டொலர் கடன் நிவாரணத்தின் ஒரு பகுதியாக இருந்த இந்த தொகை கடந்த மார்ச் மாதத்திற்குள் முடிக்கப்பட வேண்டும்.

இந்தியா வழங்கிய ஒரு பில்லியன் டொலர் கடன் முக்கியமாக மருந்துகள் மற்றும் உணவுப் பொருட்களின் இறக்குமதிக்காகப் பயன்படுத்தப்பட்டது.

இந்திய தரப்பினருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் கடன் நிவாரணம் 2024 மார்ச் வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பிரதி திறைசேரி செயலாளர் பிரியந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

“ஒரு பில்லியன் டொலர் கடன் நிவாரணத்தில் இன்னும் 350 மில்லியன் டொலர்கள் எஞ்சி இருக்கிறது. அந்த பணத்தை தேவைக்கேற்ப பயன்படுத்தும் திறன் எங்களிடம் உள்ளது’’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here