போராட்டக்காரர்களுக்கு முறையற்று பிறக்கும் குழந்தைகளை ரயில் நிலையங்களில் கைவிடுகின்றனர்!

Date:

காலிமுகத்திடல் போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் தமது முறையற்ற பிள்ளைகளை புகையிரத பாதையில் விட்டுச் செல்வதாக வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குற்றஞ்சாட்டியுள்ளார்.

அபிவிருத்தி அதிகாரிகளுடன் நடத்திய சந்திப்பின் போது அமைச்சர் இவ்வாறு குற்றஞ்சாட்டியுள்ளார்.

”போராட்டக்காரர்கள் முறையற்ற விதத்தில் நடந்து கொண்டுள்ளனர். இதனால் தேவையற்ற குழந்தைகள் பிறக்கின்றன. அவர்கள் தமது பிள்ளைகளை புகையிரத தண்டவாளத்தில் வீசி செல்கின்றனர்.

அரச நிறுவனங்களிலும் போராட்ட குழுவின் உறுப்பினர்கள் இருந்தனர். இன்னொரு போராட்டத்தை தொடங்க அவர்களுக்கு வாய்ப்பளிக்கக் கூடாது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்க்க ஒருவருக்கு உரிமை உண்டு. ஆனால் அரசை சீர்குலைக்க யாருக்கும் உரிமை இல்லை. ஒரு அரசை சீர்குலைப்பது என்பது பயங்கரவாதச் செயல்.

தமது அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்களை சுதந்திரமாகச் செயற்படுவதற்கு தான் எப்போதும் அனுமதிப்பதாகவும், அவற்றுள் எந்தப் பிரச்சினை ஏற்பட்டாலும் உதவத் தயங்கப் போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

37 சீனப் பிரஜைகள் நாடு கடத்தல்

சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்ட 37 சீனப் பிரஜைகள் இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்டனர்.  சட்டவிரோதச்...

ஸ்டாலின் தோல்வி!

தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் (ஏப்ரல்) 23-ந்...

அதிரடி முன்னிலையில் தமிழக விஜய் வெற்றிக் கழகம்!

தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4,...

மகிந்த ராஜபக்சவுக்கு CIABOC அழைப்பாணை!

இலங்கை விமானச் சேவையின் சர்ச்சைக்குரிய ஏர்பஸ் விமானக் கொள்வனவு தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு...