பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்கம் செய்வதற்கான பிரேரணை பாராளுமன்றில் சற்று முன்னர் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதன்படி, குறித்த பிரேரணை 46 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
குறித்த பிரேரணைக்கு ஆதரவாக 123 வாக்குகளும், எதிராக 77 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளது.
ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்கம் செய்யுமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவினால் பாராளுமன்றத்தில் பிரேரணை கடந்த மாதம் சமர்ப்பிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
N.S