வடிவேல் சுரேஷ் மீது சஜித் ஒழுக்காற்று நடவடிக்கை

0
212

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைவர் பதவியில் இருந்து ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்கம் செய்வதற்கான அரசாங்கத்தின் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷுக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி (SJB) ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளது.

சுரேஷுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும், இந்த விவகாரம் வியாழக்கிழமை (25) விவாதிக்கப்படும் என்றும் கட்சியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க எம்.பி.யின் தீர்மானம் எஸ்.ஜே.பி எடுத்த முடிவை மீறுவதாகும் என பண்டார தெரிவித்தார்.

PUCSL தலைவரை பதவி நீக்கம் செய்வதற்கான பிரேரணையை நேற்று 123 ஆதரவாகவும், 77 எதிராகவும் பெற்று பாராளுமன்றம் நிறைவேற்றியது.

எதிர்கட்சி எம்.பி.க்கள் மற்றும் ‘சுயேட்சை’ என அழைக்கப்படும் எம்.பி.க்களில் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தவர் வடிவேல் சுரேஷ் எம்பி ஆவார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here