முல்லைத்தீவு செல்கிறார் ஜனாதிபதி

0
140

இம்மாதம் 24 ஆம் திகதி முல்லைத்தீவில் இடம்பெறும் நடமாடும் சேவையில் பங்குகொள்ள ஜனாதிபதி முல்லைத்தீவிற்கு விஜயம் செய்யவுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தின் நடமாடும் சேவை எதிர் வரும் 24ஆம் 25 ஆம் திகதிகளில் முல்லைத்தீவில் இடம்பெறவுள்ளது.

இதில் பங்குகொள்ளவே ஜனாதிபதி நேரில் முல்லைத்தீவு செல்கின்றார். இம் நடமாடும் சேவையில் அடையாள அட்டை, சாரதி அனுமதிப் பத்திரம், பிறப்பு இறப்பு பதிவுகள் என்பன ஒரே நாளில் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தை வதிவிடமாக கொண்டவர்கள் மட்டுமே இந்த சேவையை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் இச் சேவையில் பயன்பெற விரும்பும் பொதுமக்கள் இதற்கான ஆவணங்களை முற்கூட்டியே பெற்று உரிய அதிகாரிகளின் கையொப்பத்தை பெறுவதன் மூலம் இந்த நடமாடும் சேவையில் ஆவணங்களை உடனடியாகப் பெற்றுக்கொள்ளும் சந்நர்ப்பம் உள்ளதாக மாவட்டச் செயலக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here