பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று வீடொன்றின் மீது கவிழ்ந்ததில் 25 பயணிகள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இன்று காலை பதுளையில் இருந்து பயணிக்க ஆரம்பித்த இந்த பஸ் உடுவர 7ம் கட்டை பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
காயமடைந்தவர்கள் தற்போது பதுளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
பேருந்தின் நான்கு சக்கரங்களும் கவிழ்ந்துள்ளதாகவும், பஸ் கவிழ்ந்திருக்காவிட்டால் பதுலு ஓயா வரை உருண்டிருக்கும் எனவும் பிரதேசவாசி ஒருவர் தெரிவித்தார்.
