மலையகம் 200 பிரமாண்ட நிகழ்வுக்கு தயாராகிறது காங்கிரஸ்

0
170

மலையகம் 200 பிரம்மாண்ட நிகழ்வின் ஏற்பாடுகள் தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் தலைமையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று கொட்டகலை சி.எல்.எப் வளாகத்தில் இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினரும் காங்கிரஸின் தவிசாளருமான மருதபாண்டி ரமேஷ்வரன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

மலையகம் 200 ஏற்பாட்டு திட்டம் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டதோடு தொழிலாளர்களுக்கான புதிய சம்பள உயர்வு குறித்த யோசனை முன்வைப்பது தொடர்பிலும் மலையகப் பகுதியில் முதலாவது பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here