திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்றது.
இதில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர்களான கபில அத்துகோரல, ஏ.எல்.எம். அதாவுல்லா, பிரதம செயலாளர் மற்றும் மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
திருகோணமலை மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் குறித்து இங்கு விரிவாக தொடர்பாக கலந்துரையாடியதாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
மாவட்டத்தில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் குறித்து அரச அதிகாரிகள் ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு வந்ததுடன் அதற்கு விரைவில் தீர்வு வழங்குவதாக ஆளுநர் தெரிவித்தார்.













