கிரிக்கெட் மோசடி குறித்து பேசத் தடை

Date:

இலங்கை கிரிக்கெட் சங்கத்தின் அதிகாரிகளுக்கு அவதூறான அறிக்கைகளை வெளியிடுவதை தடுக்கும் வகையில் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே மற்றும் அவருக்கு கீழ் பணியாற்றும் அனைவருக்கும் எதிராக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

குறித்த அமைப்பு மேற்கொண்ட சட்ட நடவடிக்கைகளுக்கு அமைய கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

2022 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கட் போட்டித் தொடரில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் மற்றும் மோசடிகள் தொடர்பாக தேசிய கணக்காய்வு அலுவலகம் நடத்திய விசேட கணக்காய்வுக்கு அமைய, விசேட கணக்காய்வு வரைவு வெளியிடப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் தனது அறிவிப்பில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அதிகாரிகளுக்கு எதிராக ஊடகங்கள் வெளியிட்ட அறிக்கைகள் பொய்யானவை மற்றும் அவதூறானவை என குறிப்பிடப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

எரான் தலைமையில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் இடைக்கால நிர்வாகம்

இலங்கை கிரிக்கெட்டில் பரவலான மாற்றங்களை கொண்டு வருவதற்காக விளையாட்டு துறை அமைச்சரினால்...

அர்ச்சுனா எம்பி பிணையில் விடுவிப்பு

யாழ்ப்பாணம், பெரியவிளான் பகுதியில் இடம்பெற்ற காணித் தகராறின் போது, பெண் ஒருவரைத்...

600,000 அமெரிக்க டொலர் மாயம்! விசாரணை தீவிரம்!!

இலங்கைத் அஞ்சல் திணைக்களத்தினால் அமெரிக்கத்அஞ்சல் சேவைக்கு வழங்கப்பட்ட பணத்தில் மேலும் 600,000...

மீண்டும் மின்சார கட்டண உயர்வு

இலங்கையில் மீண்டும் மின்சார கட்டண உயர்வு தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நடைபெற்று...