கிழக்கு முஸ்லிம் சமூகத்தின் பேராதரவு கிழக்கு ஆளுநருக்கு

0
160

சம்மாந்துறை அஹதியா பாடசாலையின் விருது வழங்கும் விழா அப்துல் மஜீத் மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பிரதம அதிதியாக பங்கேற்றார்.

சம்மாந்துறை ஜம்மியத்துல் உலமா நிறுவனம், பரிபாலன சபை மற்றும் மஜ்லிஸ் அஸ்-ஷூராவின் ஏற்பாட்டில், அஹதிய்யா பாடசாலைகளின் இடைநிலைப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான சான்றிதழ் இதன் போது வழங்கி வைக்கப்பட்டது.

32 அஹதிய்யா பாடசாலைகளைச் சேர்ந்த 300 மாணவர்களுக்கான பரிசில்களையும், சான்றிதழ்களையும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் கருத்து தெரிவித்த ஆளுநர், இந்நிகழ்வில் பங்குபற்றியது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது எனவும், அல் குரான் புனித நூலானது வாழ்க்கையில் ஒழுக்கத்தையும், அறநெறியையும் கற்பிக்கும் ஒரு புனித நூல் எனவும், இக்கற்கைநெறியை கற்றவர்கள் சமூகத்தில் பெரும் ஆற்றல் மிக்கவர்களாகவும், தமது வாழ்க்கையை சிறந்த முறையில் வழிநடத்துபவர்களாகவும் திகழ்வார்கள் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here