கிளிநொச்சி மாவட்டத்தில் 3000க்கும் மேற்பட்ட சிறுவர்கள் போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி , கண்டாவளை , பச்சிலைப்பள்ளி , பூநகரி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் இந்நிலைமை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருட்களின் விலையேற்றம் , தொழில் வாய்ப்பின்மை , வறுமை, உணவுப் பாதுகாப்பின்மை உள்ளிட்ட காரணங்களால் இவ்வாறு சிறுவர்கள் போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, 568க்கும் மேற்பட்ட ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்களும், 2,675க்கும் மேற்பட்ட 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுமே போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் 1,288 சிறுவர்களும் , கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் 768 சிறுவர்களும், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் 393 சிறுவர்களும் போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.