அஜித் நிவாட் கப்ரால், லலித் வீரதுங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி

Date:

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.

தினியாவல பாலித தேரர் தொடுத்த வழக்கையே தள்ளுபடி செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குற்றச் செயலில் ஈடுபட அமெரிக்காவில் வசிக்கும் பாகிஸ்தான் பிரஜையான இமாத் ஸுபேரிக்கு 6.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பொது நிதியை வழங்கியதாக குற்றம் சுமத்தியே தினியாவல பாலித தேரர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

இந்த நிலையில், 2014 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, ஜனாதிபதியின் செயலாளர் என்ற வகையில், எவ்வித அங்கீகாரமும் இன்றி, இலங்கை மத்திய வங்கிக்கு இமாட் சுபேரிக்கு குறித்த தொகையை வழங்குமாறு, உடன்படிக்கை செய்துகொண்டதாகவும் கணக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாட்டில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக போதிய சாட்சியங்கள் தாக்கல் செய்யப்படவில்லை எனக் கூறி வழக்கை இரத்து செய்யுமாறு நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காரணமின்றி கைது செய்ய வேண்டாம்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில், தகுந்த காரணம் இன்றி தன்னைக்...

அமெரிக்க இராணுவம் ஈரான் மீது வான்வழித் தாக்குதல்

ஹோர்முஸ் நீரிணை பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க இராணுவத்தின் AH-64...

இலங்கை மத்திய வங்கி யின் உத்தரவு

இலங்கைக்குள் ஏற்றுமதி வருமானத்தைப் பெற்றுக்கொள்ளும் அனைத்து ஏற்றுமதியாளர்களும், தங்களது மாதாந்த வருமானத்தில்...

இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்

இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னையில் இன்று காலமானார்....