இன்று (09) இரவு பெய்து வரும் அடை மழையுடன் ஹப்புத்தளை பெரகலை மற்றும் கொழும்பு – பதுளை பிரதான வீதிக்கு இடைப்பட்ட உடா பிளாக்வுட் பகுதியில் இரண்டு இடங்களில் பாறாங்கற்களுடன் மண்சரிவினால் ஒரு பாதை தடைப்பட்டுள்ளதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வீதியின் மறுபக்கம் செங்குத்தான சரிவுகளைக் கொண்டிருப்பதாலும், அது மூழ்கக்கூடும் என்பதாலும் ஒற்றையடிப் பாதையில் கனரக வாகனங்களை செலுத்துவது ஆபத்தானது எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
மேலும் மண்சரிவு மற்றும் பாறைகள் விழும் அபாயம் உள்ளதால் வாகன சாரதிகள் அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.