மருத்துவப் பட்டங்களை விற்பனை செய்யும் அரசாங்கத்தின் சதியை முறியடிப்போம் என்ற தொனிப்பொருளில் கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர் ஒன்றியம் இன்று (09) ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தின் போது கொழும்பு நகர மண்டப சந்தியில் மாணவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
உத்தேச தனியார் மருத்துவ பீடங்களான லைசியம், NSBM, கேட்வே, ஸ்லிட் மற்றும் கொத்தலாவல ஆகிய பீடங்களுக்கு ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது.
இலவசக் கல்வியின் சடலத்தை அடையாளப்படுத்தும் வகையில் சவப்பெட்டியுடன் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், மாணவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
சவப்பெட்டியை பொலிசார் கைப்பற்றிய பின்னர் மாணவர்கள் லிப்டன் சுற்றுவட்டத்தில் சுமார் ஒரு மணிநேரம் தீபம் ஏற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.















