இஸ்ரேல் – காசா மோதலில் இலங்கை நடுநிலையான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
இலங்கை நடுநிலையானது எமது இலக்குகளை அடைய உதவும் எனவும் ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகச்சந்திப்பிலேயே அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன, இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.
“காசா பகுதியில் மோதில் ஈடுபட்டுவரும் எந்தவொரு தரப்பினரையும் இலங்கை ஆதரிக்கக் கூடாது.
இலங்கை எடுக்கும் நிலைப்பாடுகளால் ஏற்படும் பாதகமான விளைவுகள் குறைப்பதாக எமது தீர்மானங்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
குறிப்பாக பொருளாதாரம் தொடர்பில் இலங்கை தனது சொந்த நிகழ்ச்சி நிரலில் கவனம் செலுத்த வேண்டும்“ என பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.