உயர் வெடிபொருட்கள் யாழ். பகுதியில் கைப்பற்றப்பட்டன

Date:

யாழ்ப்பாணம், குருநகர் ஜெட்டி பகுதியில் நேற்று (17) இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது மிக நுணுக்கமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 1 கிலோ கிராம் TNT உயர் வெடிமருந்துடன் 3 அடி 4 அங்குலங்கள் கொண்ட பாதுகாப்பு உருகிகள் கைப்பற்றப்பட்டன.

வடக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் வேலுசுமன நிருவனத்தின் கடற்படையினர் இன்று யாழ்ப்பாணம், குருநகர் ஜெட்டி பகுதியில் மேற்கொண்டுள்ள விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, அப்பகுதிக்கு அருகிலுள்ள புதருக்குள் இருந்த சந்தேகத்திற்கிடமான பொதி ஒன்று ஆய்வு செய்தனர்.

அந்த பொதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 1 கிலோ 950 கிராம் TNT உயர் வெடிமருந்துகள் மற்றும் சுமார் 3 அடி 4 அங்குலங்கள் கொண்ட பாதுகாப்பு உருகிகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

மேலும், சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தும் நோக்கில் இந்த வெடிபொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றதுடன் வெடிபொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் வரை கடற்படை காவலில் வைக்கப்பட்டுள்ளன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கொழும்பில் நடந்த “ஒற்றுமையின் எதிரொலிகள்”

இலங்கையில் சமூக ஒற்றுமை மற்றும் அமைதியை வலுப்படுத்துதல் (SCOPE) திட்டத்தின் இறுதி...

NPP ஹிங்குராக்கொடை பிரதேச சபை உறுப்பினர் பிணையில் விடுவிப்பு

ஹிங்குராக்கொடை காவல் நிலையத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காகவும், இரண்டு காவல்துறை அதிகாரிகளை...

சிலாபம் – தெதுறு ஓயாவில் நீராடச் சென்று காணாமல் போன ஐவரின் சடலங்களும் மீட்பு

சிலாபம் - தெதுறு ஓயாவில்நீராடச் சென்று காணாமல் போன ஐ ஐவரின்...

கர்நாடக துணை முதல்வருடன் செந்தில் தொண்டமான் சந்திப்பு

இலங்கை தொழிலாளார் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் கர்நாடக துணை முதல்வர்...