இஸ்ரேல் எல்லைக்குள் சட்டவிரோதமாக பிரவேசிக்க வேண்டாம்; இலங்கையர்களுக்கு எச்சரிக்கை

Date:

இஸ்ரேல் எல்லைக்குள் சட்டவிரோதமாக பிரவேசிப்பதை தவிர்க்குமாறு இஸ்ரேலின் சுற்றுப்புற பகுதிகளில் வாழும் இலங்கையர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்துக்கும் இடையில் அதிகரித்து வரும் மோதல் சூழ்நிலை காரணமாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளது.

இந்நிலையில், இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப் பேச்சாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே, தற்போது 32 இலங்கையர்கள் இஸ்ரேல் சிறையில் இருப்பதாகவும், காணாமல் போன இலங்கையர் யாதவர பண்டார தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஹமாஸ்-இஸ்ரேல் மோதலில் உயிரிழந்த அனுலா ஜயதிலக்கவின் சடலம் காணொளி தொழில்நுட்பம் மூலம் குடும்பத்தினரின் உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார்.

மத சடங்குகளின் பின்னர் சடலம் இன்று (25) ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே, ஹமாஸ்-இஸ்ரேல் இடையேயான போர் 18 நாட்களுக்கும் மேலாக நீடித்துள்ளது.

இந்த மோதலில் இரு தரப்பினரையும் சேர்ந்த 5000க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பலாங்கொடையில் காட்டுத் தீ

பலாங்கொடை நொன்பெரியலில் உள்ள நெக்ராக் வத்த அருகே உள்ள கோம்மொல்லி பாலத்துடு...

நேபாள் அரசுக்கு நேர்ந்த கதி NPP அரசுக்கும்

கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நிர்மல் ரஞ்சித் தேவசிறி கூறுகையில், தற்போதைய தேசிய...

பஸ்களை அலங்கரிக்கத் தடை

பஸ்களை அலங்கரிப்பதற்கும், மேலதிக பாகங்களை பொருத்துவதற்கும் சட்ட அனுமதிகளை வழங்கி வெளியிடப்பட்ட...

பாடசாலை விடுமுறை குறித்து கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு

2026 ஆம் ஆண்டில் பின்பற்றப்பட வேண்டிய பாடசாலைகளுக்கான தவணை அட்டவணையை கல்வி,...