யாழ். போதனா வைத்தியசாலையில் மது போதையில் குழப்பம் விளைவித்த 2 பேர் கைது

0
172

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் மது போதையில் அத்துமீறி நுழைந்து பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் முரண்பட்ட இருவர் யாழ். பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

நோயாளி ஒருவரைப் பார்வையிடுவதற்காக வைத்தியசாலை வளாகத்துக்குள் மது போதையில் அத்துமீறி நுழைந்த இருவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் முரண்பட்டுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் வைத்தியசாலை பணிப்பாளரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்குத் தகவல் அளிக்கப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்கள் இருவரையும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here