திருட்டு நெல், விசாரணை நிறைவு

Date:

குருநாகல் மாவட்டத்தில் உள்ள 04 அரச களஞ்சியசாலைகளில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த நெல் காணாமற்போனமை தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அறிக்கை விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் புத்திக இத்தமல்கொடவினால் இந்த அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கைக்கு அமைய, 2021 -2022 ஆம் ஆண்டுகளில் குருநாகல் மாவட்டத்தின் பொல்கஹவெல, ஆணமடுவ, நிக்கவரெட்டிய மற்றும் மஹவ களஞ்சியசாலைகளில் இருந்து 09,71,050 கிலோகிராம் நெல் காணாமற்போயுள்ளது.

இதன் பெறுமதி சுமார் 100 மில்லியன் ரூபாவாகும்.இந்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே 05 அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

நெல் காணாமற்போனமை தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.

நாட்டின் ஏனைய பகுதிகளிலுள்ள களஞ்சியசாலைகளில் இவ்வாறான மோசடிகள் இடம்பெற்றுள்ளதா என்பதை கண்டறியுமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நம்பிக்கையில்லா பிரேரணை இன்று விவாதம்

வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை இன்று...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மேலும் பல ரகசியங்கள் கசிவு

2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலானது ஒரு...

NDB ஊழல், கைதானவர் விளக்கமறியலில்

தேசிய அபிவிருத்தி வங்கியின் (NDB) தரவு அமைப்பிற்குச் சட்டவிரோதமாக ஊடுருவி மேற்கொள்ளப்பட்ட...

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பணிப்புறக்கணிப்பு

நாடு முழுவதிலும் இன்று (9) காலை 8 மணி முதல் 48...