இஸ்ரேல் ஹமாஸ் மோதலில் உயிரிழந்த சுஜித் யட்டவரவின் சடலம் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டது

0
159

சுஜித் யட்டவர பண்டாரவின் சடலம் இன்று (09) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.


சடலம் இஸ்ரேலில் இருந்து டுபாய் கொண்டு வரப்பட்டு அங்கிருந்து Fly Dubai Airlines விமானமான FZ-579 மூலம் காலை 08.37 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலைய விமான சரக்கு முனையத்திற்கு கொண்டு வரப்பட்டது.


சுஜித் யட்டவர  பண்டாரவின் மனைவி ஜயனி மதுவந்தி, 13 வயது மகள், 09 வயது மகன், இலங்கைக்கான இஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் தினேஷ் பிரியந்த, முன்னாள் அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விமான நிலைய நிர்வாக அதிகாரி அசோக பிரேமசிறி ஆகியோர் சடலத்தை பெற்றுக் கொள்வதற்காக அங்கு வந்திருந்தனர்.
சுஜித் யட்டவர பண்டாரவின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் சனிக்கிழமை (11) வென்னப்புவ, துலாவெல, மடவலப்பிட்டி பொது மயானத்தில் நடைபெறவுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here