Tuesday, October 1, 2024

Latest Posts

Breaking – மஹிந்த, கோட்டா, பசிலே பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பு ; உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச உள்ளிட்ட பலரே பொறுப்பு என உயர் நீதிமன்றம் இன்று (நவ.14) தீர்ப்பளித்துள்ளது.

மூன்று ராஜபக்ச சகோதரர்கள் மற்றும் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர்களான அஜித் நிவார்ட் கப்ரால் மற்றும் பேராசிரியர் டபிள்யூ.டி. லக்ஷ்மன், நிதி அமைச்சின் முன்னாள் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல, முன்னாள் ஜனாதிபதி செயலாளர் பி.பி. ஜயசுந்தர மற்றும் மத்திய வங்கியின் நாணய சபை உறுப்பினர்கள் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் சந்திரா ஜயரத்ன மற்றும் பலர் நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு விசாரணை கோரி தாக்கல் செய்த இரண்டு அடிப்படை உரிமை (FR) மனுக்கள் மீதான தீர்ப்பு இன்று உயர் நீதிமன்றத்தின் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாமால் வழங்கப்பட்டது.

நீதியரசர்கள் குழாமின் பெரும்பான்மையானவர்களின் நிலைப்பாட்டின் அடிப்படையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தை தவறாக கையாண்டதன் விளைவே பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட காரணம் எனவும் நீதியரசர் குழாம் தீர்ப்பளித்துள்ளது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.