புதிதாக 100 பொருட்களுக்கு வெட் வரி

Date:

வெட் வரி அறவிடப்படாத 100 பொருட்களுக்கு வெட் வரி அறவிடப்படப் போவதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

வரவு செலவு திட்டம் குறித்த பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்காக ஜனாதிபதி 133 பில்லியன் ரூபாய் நிதியை ஒதுக்கியுள்ளார்.

அதேநேரம் புதிய வரிகள் ஊடாக 800 பில்லியன் ரூபாயை அறவிட திட்டமிடப்பட்டுள்ளது.

உதாரணமாக சம்பளம் 100 ரூபா அதிகரிக்குமாயின் வரி 600 ரூபாயாக அதிகரிக்கும்.

வரி அறவிடப்படாத 100 பொருட்களுக்கு வரி அறவிடப்போகின்றனர்.

தொலைபேசி, கணனி, அனைத்து மின்சாதன பொருட்களுக்கும் வரி அறவிடப்போகின்றனர்.

அதேநேரம் அனைத்து மருத்துவ உபகரணங்களுக்கும் 18 வீதம் வரி அறவிடப்படப் ​போகிறது.

தேயிலை கொழுந்து உள்ளிட்ட மேலும் பல பொருட்களுக்கு வெட் வரியை அறவிடப்போகின்றனர்.

எனினும் இது எவற்றையும் ஜனாதிபதி வரவு செலவு திட்ட உரையில் வௌியிடவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கெஹேலியாவின் மூத்த மகள் மீண்டும் கைது

முன்னாள் அமைச்சர் கெஹேலியா ரம்புக்வெல்லாவின் மூத்த மகள் சமித்த்ரி ரம்புக்வெல்லா, லஞ்சம்...

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்ய தனிநபர் பிரேரணை

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்வதற்கான யோசனைகள் அடங்கிய தனிநபர் பிரேரணையொன்று...

விளையாட்டு அமைச்சின் பெயரில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெயரில் மோசடி

இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சின் பெயரை தவறாக பயன்படுத்தி, வெளிநாட்டு வேலை...

ஜனாதிபதி அனுரவுக்கு நன்றி தெரிவித்தார் மோடி!

கொழும்பு கங்காராமய விகாரையில் புனித தேவ்னிமோரி (Devnimori) அவசரங்களின் (Relics) திருக்காட்சியை...