நாட்டில் இன்றைய தினமும் 1,243 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 615,902 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொவிட் தொற்றுக்கான மேலும் 29 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். அதன்படி, நாட்டில் இதுவரை 15,544 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர்.