மாற்றுப் பாலினத்தவரின் விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு யாழ் நகரில் விழிப்புணர்வு நடைபவனியொன்று நேற்று முன்னெடுக்கப்பட்டது.
மாற்றுப் பாலினத்தவர்களின் வலையமைப்பின் ஏற்பாட்டிலேயே குறித்த பேரணியானது முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது மாற்றுப் பாலினத்தவர்களாக வாழ்கின்ற அனைவரும் சமூக பொறுப்புடையவர்கள் எனவும், அவர்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராகக் குரல் கொடுப்போம் எனவும் பேரணியில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.