இன்றைய வானிலை

Date:

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் அதேவேளை வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய மாகாணங்களில் பிற்பகல் 01.00 மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் வரை ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மோசமான நிலைக்கு தள்ளப்பட்ட இலங்கை ரூபாய்!

மத்திய வங்கியின் வட்டி விகிதக் குறைப்பு மற்றும் இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன்...

அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை

தென்மேற்கு பருவப் பெயர்ச்சி மழை படிப்படியாக நாடு முழுவதும் நிலைபெற்று வருவதாக,...

சுரேஷ் சலே தொடர்ந்தும் தடுப்புக் காவலில்

முன்னாள் அரச புலனாய்வு சேவையின் தலைவர் சுரேஷ் சலே தொடர்பான வழக்கை...

இறக்குமதி பால் மா விலை உயர்வு

இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதி ஒன்றின் விலை...