நாடாளுமன்றத்தில் புதிய தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதன் பிரகாரம் புதிய தேசிய அரசாங்கத்தில் பல கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் இணைந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இதில் பல சமகி ஜன பலவேக உறுப்பினர்கள் இணையவுள்ளதாகவும் அவர்களில் சிலருக்கு அமைச்சுப் பதவிகளும் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
புதிய தேசிய அரசாங்கத்தை உருவாக்குவதன் முக்கிய நோக்கங்கள் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியை சரிசெய்து பொது மக்களுக்கு நிவாரணம் வழங்குவதாகும்.
