வெற்றிபெறக்கூடியவர் வேட்பாளராக வருவார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஏனெனில் எமது பிரதிநிதித்துவ முகாமை வெற்றிபெறச் செய்ய வேண்டியது அவசியமாகும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைக் காரியாலயத்தில் இன்று (17) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என ஜனாதிபதி வேட்பாளர் பட்டியலில்ரணில் விக்கிரமசிங்கவின் பெயரும், இன்னும் பல பெயர்களும் உள்ளதாகவும், இறுதியில் அந்த பட்டியலில் இல்லாத ஒருவர்கூட அந்த வேட்பாளராக வரலாம் என்றும் அவர் கூறினார்.
வேட்பாளர் குறித்து கவலைப்படத் தேவையில்லை என கூறிய அவர், வேட்பாளர் யார் என்பது முக்கியமல்ல, வெற்றி பெற முடியுமா என்பதுதான் முக்கியம் என்றார்.
இதனிடையே, தனது அரசியல் முகாமுக்கு வெற்றியைத் தரும் எந்தக் கட்சி அல்லது சக்தியுடன் வேண்டுமானாலும் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை மறுசீரமைப்பதற்காக கிராமிய மக்களைக் தெளிவூட்டும் வேலைத்திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.