இந்து – லங்காவிற்காக அன்று கொன்று குவித்தனர் : இன்று இந்தியாவில் பேச்சுவார்த்தை

0
165

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க இன்று டை கோர்ட் அணிந்து இந்தியா செல்வதற்கு முன்னர் வர செய்த தவறை மக்களுக்கு தெளிவாக தெரிவித்து மன்னிப்புக் கோரியிருக்க வேண்டும் என முன்னாள் சுகாதார அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்ன தெரிவித்திருந்தார்.

ஹிரு தொலைக்காட்சியின் ‘சலகுன’ எனும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்;

“.. ஜனநாயக ரீதியான மக்கள் விடுதலை முன்னணி வருவதை நான் வரவேற்கிறேன். ஆனால் இல் மஹ மாநாட்டையும் பக் மஹ மாநாட்டையும் ஒன்று சேர்த்து கொண்டாட முடியாது. பக் மஹ மாநாட்டை கொண்டாடுவது 70களில் கொலை செய்த கூட்டம்.. இல் மஹ மாநாட்டை கொண்டாடுவது 89 கொலையாளிகள்..

இன்று இந்தியாவுக்கு டை கோர்ட் அணிந்து சென்றுள்ளார். மிகவும் சிறப்பு.. அன்று லெடிஸ் ஜயவர்தன, அவர் இலங்கையின் முதலாவதாக மருந்துகளை தயாரித்த நபர், அனைவரும் மதிக்கும் நபர், இந்தியாவில் இருந்து மருந்துகளை கொண்டு வந்தார் என கொலை செய்தனர். பருப்பு கொண்டு வந்தவரை கொலை செய்தனர். அரிசு ஏதும் கொண்டு வந்திருந்தால் கொலை செய்தனர், யார் மக்கள் விடுதலை முன்னணியினர் தான் கொன்றது.

இந்து – லங்கா திட்டத்தினை எதிர்த்தனர். இன்று இந்து – லங்கா திட்டமின்றி இந்தியாவுடன் கலந்துரையாட முடியுமா? அன்று சரியான இடத்தில் இருந்த விஜய குமாரதுங்கவை கொன்றார்கள். அடுத்ததாக UNP இல் எனது கட்சியின் 108 பேரை கொன்றனர். இதற்கெல்லாம் காரணம் என்னவென்றால் நாம் இந்தியாவுடன் இருந்தது தான்.. இப்போ அநுர குமார திசாநாயக்க டை கோர்ட் அணிந்து சென்றுள்ளார், அதற்கு பரவாயில்லை, ஆனால் அன்று இவ்வாறு நடந்தமை எமது தவறு என அவர் தெளிவாக தெரிவித்து மன்னிப்புக் கேட்டிருக்க வேண்டும்..”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here