திருமதி புஷ்பிகா டி சில்வா வென்ற மிஸ் ஸ்ரீலங்கா அழகி பட்டத்தை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ரத்து செய்ய இலங்கை திருமதி அழகிப் போட்டி ஏற்பாட்டுக் குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
புஷ்பிகா டி சில்வாவின் உள்ளூர் பிரதிநிதியாகச் செயற்படும் மற்றும் ஏற்பாட்டுக் குழுவின் பொறுப்பாளர் சந்திமால் ஜயசிங்க, அமைப்புக்கு வழங்கப்பட்டுள்ள சட்ட அதிகாரங்களுக்கு அமைவாக இன்று (08) முதல் இலங்கையின் திருமதி ஆழகி ‘உள்ளூர் அல்லது சர்வதேச ரீதியில் ‘ அந்த பட்டத்தை இழப்பார் என அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.
அண்மையில் இலங்கை திருமதி அழகி ஏற்பாட்டுக் குழுவிற்கு எதிராக புஷ்பிகா டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட பொய்யான குற்றச்சாட்டுக்களால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ReplyForward |