இந்தியா, இந்தோனேசியா போன்ற நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் எட்டு மடங்கு அதிகரிப்புக்கு இடமளிக்கும் வகையில் மேம்படுத்தப்பட்ட இணைப்புக் கட்டமைப்பின் முக்கியமான தேவையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
பெர்த்தில் நடைபெற்றுவரும் ஏழாவது இந்து சமுத்திர மாநாட்டில் “நிலையான மற்றும் நிலைபேறான இந்து சமுத்திரத்தை நோக்கி” என்ற தொனிப்பொருளில் பிரதான உரையாற்றிய போது ஜனாதிபதி இதனை வலியுறுத்தினார்..
இந்தியப் பெருங்கடல் வெப்பமயமாதல் மற்றும் கடல் மட்டம் உயரும் அபாயத்தைக் குறிப்பிட்ட ஜனாதிபதி விக்கிரமசிங்க காலநிலை நெருக்கடிக்குத் தீர்வுகாண வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
காலநிலை மாற்றத்தின் விளைவுகளைத் தணிக்கவும் மற்றும் பாதிக்கப்படக்கூடிய நாடுகளுக்கு காலநிலை நீதியை உறுதிப்படுத்தவும் வெப்ப மண்டல பெல்ட் முன்முயற்சி மற்றும் சர்வதேச காலநிலை மாற்ற பல்கலைக்கழகம் போன்ற முன்முயற்சிகளை அவர் முன்மொழிந்தார்.