நாட்டின் பொருளாதார நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால், எதிர்வரும் சிங்கள புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்கு தேவையான சூழலை தயார்படுத்துமாறு கேட்டுக் கொள்வதாக இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க நேற்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
மதுபானங்களின் விலை அதிகரிக்கப்பட்டதால் சட்டவிரோத மதுபான உற்பத்திகள் அதிகரித்துள்ளன.
எனவே இந்த ஆண்டு சித்திரை புத்தாண்டை மகிழ்வுடன் கொண்டாட மதுபானங்களின் விலைகளை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஜனாதிபதி நிறைவேற்ற வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.