ஹம்பாந்தோட்டை மாநகர மேயர் பதவியிலிருந்து எராஜ் பெர்னாண்டோ இராஜினாமா செய்துள்ளார்.
இலங்கை உப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக பதவியேற்கும் நோக்கில் மேயர் பதவியை எராஜ் இராஜினாமா செய்துள்ளார்.
எனினும் அவருக்கு குறித்த தலைவர் பதவி வழங்கப்பட வாய்ப்பில்லை என தெரியவருகிறது.
சமல் ராஜபக்ஷவின் கூட்டாளியான எராஜிக்கு அந்த பதவியை வழங்க பிரதமர் விரும்பவில்லை என கூறப்படுகிறது.