அரசியல்வாதிகள், அரச தரத்திலான அதிகாரிகள் உள்ளிட்ட 150,000 இற்கும் அதிகமானோர் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான அறிக்கையை கையளிக்க வேண்டும் என இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழு அறிவித்துள்ளது.
எதிர்வரும் முதலாம் திகதி முதல் எதிர்வரும் ஜூலை 30ஆம் திகதி வரை அவற்றை கையளிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட ஊழல் எதிர்ப்பு சட்டத்திற்கமைய இம்முறை முதல் தடவையாக சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான அறிக்கையை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக ஆணைக்குழு கூறியுள்ளது.
அதற்கமைய, புதிய அதிகாரிகள் மற்றும் தனிநபர் பிரிவினர், புதிய சட்டத்தின் கீழ் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான அறிக்கையை வழங்க வேண்டியுள்ளது.
ஊழல் எதிர்ப்பு சட்டத்திற்கமைய, சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான அறிக்கையை வழங்குவதற்கான வழிகாட்டல்கள் அடங்கிய சுற்றுநிருபம், இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழுவின் www.ciaboc.gov.lk உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வௌியிடப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.