சுகாதாரத் துறை பணியாளர்களின் வருமானம் சுகாதாரத் துறையில் பணியாற்றுபவர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான விபரங்கள் பத்திரிகைகளில் முழுப்பக்கமாக வெளியிடப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இந்த நாட்களில் சுகாதார நிபுணர்கள் செய்து வரும் பணிபகிஷ்கரிப்பு குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்
,”அடுத்த சில நாட்களில் தற்போது சுகாதாரத் துறையில் இருப்பவர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் குறித்து நாளிதழ்களில் முழுப் பக்க விளம்பரம் வரும். அப்போது எல்லோருக்கும் இவர்களின் சம்பளம் பற்றிய ஒரு புரிதல் கிடைக்கும். சராசரி தாதி சுமார் 400 மணி நேரம் கூடுதல் நேரம் வேலை செய்கிறார். 150 மணி நேரம் எடுத்துக் கொண்டால், மூன்றாம் தர தாதி ஒருவருக்க சாதாரணமாக 1,02,000 ரூபாவும் முதல் தர தாதி ஒருவருக்கு 180,000 ரூபாவும் செலவாகின்றது” எனத் தெரிவித்தார்.