இராணுவத்தினருக்கு இன்று முதல் பொது மன்னிப்பு காலம்

Date:

நீண்ட நாட்களாக விடுமுறையின்றி கடமைக்கு சமூகமளிக்காத இலங்கை இராணுவத்தின் இராணுவ வீரர்களுக்கு இன்று (20) முதல் பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

முறையான விடுமுறையின்றி கடமைக்கு சமூகமளிக்காத மற்றும் சட்டவிரோதமான முறையில் சேவையை விட்டு வெளியேறியுள்ள இராணுவத்தினருக்கு 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி முதல் 2024 ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் திகதி வரை பொது மன்னிப்பு காலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது மன்னிப்புக் காலத்தின் போது, தமது படையணி தலைமையகத்துடன் தொடர்பு கொண்டு சட்டரீதியாக சேவையை விட்டு வெளியேற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இராணுவ அடையாள அட்டையின் நகல், தேசிய அடையாள அட்டை அல்லது சாரதி அனுமதிப் பத்திரம், சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் வரவு வைக்கப்பட்டுள்ள வங்கி புத்தகத்தின் புகைப்பட நகல் இங்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும் என இராணுவம் அறிவித்துள்ளது

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சங்கீத்சன் பிணையில் விடுதலை

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சொல்லிசை பாடகர்...

4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நாட்டில் 4 மாவட்டங்களுக்கு முதற்கட்ட மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று (12) முற்பகல்...

அரசாங்கம் நீதிமன்ற நியமனங்களை தாமதப்படுத்துவதாக குற்றச்சாட்டு

உச்ச நீதிமன்றத்தில் தற்போது 4 நீதிபதி பதவிகள் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில்...

நாம் ராஜபக்சகளை போன்று சுனாமி திருடர்கள் அல்ல – பிமல் ரத்நாயக்க

எந்த அரசாங்கத்திலும் சில விடயங்கள் நடைமுறையில் இருந்து கொண்டிருந்தாலும், அவை அனைத்தும்...