யாழ். கொக்குவில் புகையிரத நிலையம் சீல் வைத்து மூடப்பட்டது!

Date:

யாழ்ப்பாணம் – கொக்குவில் புகையிரத நிலையம் தற்காலிகமாக சீல் வைத்து மூடப்பட்டுள்ளது.

கொக்குவில் புகையிரத நிலையத்தில் கடமையாற்றிய நிலைய பொறுப்பதிகாரி இருபது லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளதாக தெரிவித்தே கேப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் உடனடி நடவடிக்கையாக புகையிரத நிலையம் சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டுள்ளதுடன் நிலைய பொறுப்பதிகாரி தற்காலிக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் குறித்த புகையிரத நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதால் பிரயாணப் பயணச்சீட்டுக்களை பெற யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திற்கு செல்லுமாறு அறிவிப்பொன்றும் கொக்குவில் புகையிரத நிலையத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...

எரிபொருள் விலை உயர்வு

இன்று (30) நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம்...