இலங்கை பிரஜை அல்லாதவர் கட்சி தொடங்கலாம், அதில் சிக்கல் இல்லை

0
165

பிரஜைகள் அல்லாதவர்கள் அரசியல் கட்சியொன்றை பதிவு செய்வதற்கு எவ்வித சட்ட தடையும் இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

“பிரஜை அல்லாத ஒருவர் தேர்தலில் போட்டியிடுவதை மட்டும் இலங்கைச் சட்டம் தடுக்கிறது, அதே நேரத்தில் குடிமகன் அல்லாதவர்கள் தேர்தலில் வாக்களிப்பதையும் சட்டம் தடை செய்கிறது” என்று தேசப்பிரிய தெரிவித்தார்.

மேலும், முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே SJBயின் வேட்புமனுவில் கையொப்பமிடவில்லை என்றும், அவர் ஒருபோதும் அபே ஜாதிக பெரமுனவின் பொதுச் செயலாளராக இருந்ததில்லை என்றும் அவர் கூறினார்.

“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனான அரசியல் கூட்டணியை முறித்துக் கொண்ட காலஞ்சென்ற பாராளுமன்ற உறுப்பினர்களான மங்கள சமரவீர மற்றும் மறைந்த ஸ்ரீபதி சூரியாராச்சி ஆகியோரால் அபே ஜாதிக பெரமுன உருவாக்கப்பட்டது.

அபே ஜாதிக பெரமுனவின் பொதுச் செயலாளராக ருவான் பெர்டினாண்டாஸ் இருந்த நிலையில், டயானா கமகேவின் கணவர் அப்பதவியை பொறுப்பேற்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here