கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் செய்த திடீர் விஜயம்

Date:

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அரச வைத்தியசாலைகளுக்கு திடீர் விஜயம் மேற்கொண்டு அங்குள்ள பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி, ஆரயம்பதி , கோரைத்தீவுப்பற்று ஆகிய வைத்தியசாலைகளுக்கு விஜயம் மேற்கொண்ட அவர், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், வைத்தியர்கள் மற்றும் தாதியர்களுடன் அங்கு காணப்படும் அவசர தேவைகள் குறித்து கலந்துரையாடினார்.

மேலும் அங்குள்ள நோயாளிகளிடம் அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை திருப்தி அளிக்கிறதா என்பதையும் கேட்டறிந்தார்.

வைத்தியசாலைகளில் காணப்படும் பிரச்சினைகளை கேட்டறிந்த ஆளுநர் அதற்கான தீர்வினை வழங்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மகிந்த ராஜபக்சவுக்கு CIABOC அழைப்பாணை!

இலங்கை விமானச் சேவையின் சர்ச்சைக்குரிய ஏர்பஸ் விமானக் கொள்வனவு தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு...

ஹர்ஷண சூரியப்பெரும பதவி விலகல் செய்தி உண்மையா?

டொலர் 2.5 மில்லியன் மதிப்பிலான பொருளாதார மோசடி குறித்த விசாரணை நடைபெற்று...

விவசாயிகள் கோரும் அளவிற்கு உரத்தை வழங்க முடியாது

இவ்வருட யாலா (Yala) பயிர் பருவத்திற்கு விவசாயிகள் கோரும் அளவிற்கு முழுமையாக...

எரிபொருள் விலை மீண்டும் உயர்வு

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நேற்று (02) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும்...