இலங்கையில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பத்து இலட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில், டிபி கல்வி நிறுவனர் தம்மிக்க பெரேரா பல்வேறு வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகிறார்.
இதன்படி நாளை காலை 08.30 மணிக்கு குருநாகல் வெஹெர விளையாட்டரங்கில் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு தலைவர் தம்மிக்க பெரேரா தலைமையில் ஆரம்பமாகவுள்ளது.
டிபி கல்வி ஐடி கேம்பஸ் திட்டத்தின் மூலம் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் கணினி மொழி பாடத்தின் மதிப்பு 25 லட்சம் ரூபாய். குருநாகல் மாவட்டத்தில் உள்ள 10 IT வளாகக் கிளைகளைச் சேர்ந்த 5000 மாணவர்களுக்கு சான்றிதழ்கள் நாளை வழங்கப்படவுள்ளன.
இந்த பாடநெறியில் அவர்கள் பூர்த்தி செய்த கட்டங்களின்படி, அங்கு வழங்கப்படவுள்ள சான்றிதழ்களின் பெறுமதி 3,000 மில்லியன் ரூபாவாகும்.
பிக்குகள், மாணவர்கள், பெற்றோர்கள், பிரதேசவாசிகள் என சுமார் 10,000 பேர் இந்நிகழ்வில் பங்குபற்றவுள்ளதோடு குருநாகல் வரலாற்றில் மிகப் பெரிய சான்றிதழ் வழங்கும் விழாவாக இது அமையும்.