ஈரான் ஜனாதிபதி விபத்தில் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

0
157

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி விபத்தில் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியுடன் ஹெலிகாப்டரில் பயணித்த வெளியுறவு அமைச்சர் உட்பட 8 பேரும் விபத்தில் உயிரிழந்தனர்.

ஈரான் ஜனாதிபதி இப்ராஹின் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் கடும் பனிமூட்டம் காரணமாக ஈரானின் ஜல்பா பகுதியில் மலையில் மோதி விபத்தில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அஜர்பைஜானில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு திரும்பியபோது இச்சம்பவம் நடந்துள்ளது.

ஹெலிகாப்டரில் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சரும் பயணித்துள்ளார். ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய சம்பவத்தில் விபத்து நடந்ததாக கூறப்படும் இடத்தை டிரோன் உறுதி செய்தது.

டிரோன் உறுதி செய்த இடத்தை நோக்கி மீட்புக்குழு விரைந்தனர். இந்நிலையில், ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

விபத்து நடந்து 17 மணி நேரத்திற்கு பிறகு ஹெலிகாப்டரின் உடைந்த பாகங்கள் கண்டறியப்பட்டன. ஹெலிகாப்டர் விபத்தில் யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என ஈரான் ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியுடன் ஹெலிகாப்டரில் பயணித்த வெளியுறவு அமைச்சர் உட்பட 8 பேரும் விபத்தில் உயிரிழந்தனர். அண்டை நாடான அஜர்பைஜானில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிறகு டெக்ரானுக்கு திரும்பும் வழியில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here