சிறப்பாக இடம்பெற்ற மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய தீர்த்த உற்சவம்

0
213

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் தீர்த்த உற்சவம் புதன்கிழமை (22) காலை சிறப்பாக இடம்பெற்றது.

வரலாற்றுச் சிறப்பு மிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவப் பெருந்திருவிழா கடந்த 13 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ச்சியாக திருவிழா இடம்பெற்று வருகின்றது.

உற்சவ மூர்த்திகளுக்கு வசந்த மண்டபத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம் பெற்றதை தொடர்ந்து உற்சவ மூர்த்திகள் உள் வீதி, வெளி வீதி உலா வந்தனர்.

அதனைத் தொடர்ந்து உற்சவ மூர்த்திகள் பாலாவி தீர்த்தக்கரைக்கு சென்றதை தொடர்ந்து தீர்த்த உற்சவம் இடம்பெற்றது.

புதன்கிழமை (22) காலை 10 மணிக்கு தீர்த்த உற்சவம் இடம் பெற்றது. இதன் போது ஆயிரக்கணக்கான பக்த அடியார்கள் தீர்த்த உற்சவத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here