நோர்வே நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் செந்தில் தொண்டமான் முக்கிய கலந்துரையாடல்

Date:

இலங்கையில் பிறந்த நோர்வே நாடாளுமன்ற உறுப்பினர் கம்சி குணரத்தினம் மற்றும் நோர்வே பாராளுமன்ற உறுப்பினர் ஹிமான்ஷு குலாட்டி ஆகியோருடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இலங்கையின் கிழக்கு மாகாணத்திற்கும் நோர்வேக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் நோக்குடன் நல்லதொரு கலந்துரையாடலை மேற்கொண்டதாக செந்தில் தொண்டமான் நோர்வேயில் இருந்து தெரிவித்துள்ளார்.

நோர்வே அரசாங்கம் செய்து வரும் நல்ல பணிகளைப் பாராட்டுவதுடன், பாலின சமத்துவம் தொடர்பில் உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் கம்சி குணரத்தினம் அவர்களின் கருத்துக்களுக்கு வலுவாக ஆதரவளிப்பதாகவும், கிழக்கு மாகாண சபையின் சார்பாக நோர்வே பாராளுமன்ற உறுப்பினர்களால் மட்டக்களப்பு மாநகர சபை சம்பந்தமாக சாதகமான கருத்துக்களைக் கேட்டதில் மகிழ்ச்சிய அடைவதாகவும் அவர் கூறினார்.

ஒஸ்லோவுடன் இரட்டை நகர திட்டத்திற்கு முன்மொழியப்பட்டது. புவி வெப்பமடைதல் தொடர்பான திட்டங்களுடன் இலங்கைக்கு உதவ ஹிமான்ஷு ஒப்புக்கொண்டுள்ளதுடன், ஸ்திரத்தன்மையை உருவாக்க கிழக்கு மாகாணம் மற்றும் மலையகத்தில் அதிக தொழில் வலயங்களை நிறுவுவதற்கு ஊக்குவிப்பதாகவும் உறுதியளித்தார்.

இலங்கையின் பெருந்தோட்ட சமூகத்தின் 200 ஆவது வருடத்தின் முதல் நினைவு முத்திரையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்ததோடு பாராளுமன்ற உறுப்பினர்களையும் இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்ததாக செந்தில் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அமெரிக்கத் தபால் திணைக்களத்திற்கு அனுப்பிய பணத்துக்கும் ஆப்பு!!

இலங்கைத் தபால் திணைக்களம் அமெரிக்கத் தபால் திணைக்களத்திற்கு செலுத்த வேண்டிய 626,000...

NPP ஆட்சியிலும் ஊழல் – உறுப்பினர் பதவி விலகல்!

குருநாகல் மாநகர சபையில் நிலவும் முறையற்ற நிர்வாகம் மற்றும் ஊழல் மோசடிகளுக்கு...

வித்யா கொலை வழக்கில் நான்கு பேருக்கு மரண தண்டனை உறுதி

யாழ்ப்பாணத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய, பாடசாலை மாணவியான சிவலோகநாதன் வித்யாவை கடந்த...

மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் எங்கே..?

மத்திய வாங்கி ஆளுநர் டாக்டர் நந்தலால் வீரசிங்க சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் உள்ளாரா...