நுகர்வோர் அதிகார சபை வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு!

Date:

நுகர்வோர் அதிகார சபையில் விசாரணை அதிகாரிகளுக்காக ஏற்பட்டுள்ள வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ நேற்று (07) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார்.

நுகர்வோர் அதிகார சபையில் நாடு முழுவதும் 277 பேர் மாத்திரமே காணப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

அத்தொகை போதுமானது அல்ல என்றும் புதிய ஆட்சேர்ப்புகள் இடம் பெறுவதுடன் அதற்காக அவசியமான நடவடிக்கைகளை எதிர்வரும் மாதங்களுக்குள் எடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் நவீன் பெர்னாண்டோ கூறினார்.

எரிபொருள் உட்பட பொருட்களின் விலை குறைவடைந்து காணப்படுவதுடன் அதன் பலன் நுகர்வோருக்குக் கிடைக்காமையை சுட்டிக்காட்டிய பாராளுமன்ற உறுப்பினர் சுமித் உடுக்கும்புற வாய்மொழி மூலமாகக் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு சுட்டிக்காட்டினார்.

சரளமாக்கப்பட்ட ஒரு சந்தை நாட்டினுள் காணப்படுவதனால் நுகர்வோர் அசாதாரணங்களுக்கு உட்படுவதாகவும் பொருளாதார மந்தநிலை மற்றும் கோவிட்களுக்குப் பிறகு வியாபாரிகள் அதிக இலாபத்தை பெரும் செயற்பாடு இடம்பெற்றதாகவும் அமைச்சர் விபரித்தார்.

நுகர்வோர் சட்டம் 20 வருடங்களாக திருத்தப்படவில்லை என்றும் தற்போது காணப்படும் சட்டத்தை மாற்றி அமைத்து அமைச்சரவை அனுமதியை பெற்றுக் கொள்வதற்கு சட்டமா அதிபருக்கு தற்போது அனுப்பப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஜனாதிபதிக்கு சிறீதரன் எம்.பி அவசர கடிதம்…!

​பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசைக் கலைஞர் கணேஸ்குமார்...

சுரேஷ் சலேவுக்கு ஆதரவாக சத்தியாக்கிரகப் போராட்டம் ஆரம்பம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே மனிதாபிமானமற்ற முறையில்...

திட்வா சூறாவளி உதவி நிதி பாதுகாப்பாக உள்ளது

திட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக கிடைத்த நிதியுதவிகள் அரசுக் கருவூலத்தில்...

பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை

தெற்கு பிலிப்பைன்ஸின் மிண்டனாவோ பகுதிக்கு அப்பால் இன்று (8) அதிகாலை 7.8...