பொலிஸாரின் கண்காணிப்புக்கு மத்தியில் சிவ வழிபாடு

Date:

முல்லைத்தீவு குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் பொலிஸ் மற்றும் இராணுவப் புலனாய்வாளர்களின் கண்காணிப்புக்கு மத்தியில் இன்று சிவவழிபாடு இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு குமுழமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர்மலையில் அமைந்துள்ள ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் வழிபாடுகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. அந்தவகையில் சிவனை தரிசிப்பதற்காக ஆலய நிர்வாகத்தினர் உள்ளிட்ட பலர் இன்று காலை 10 மணியளவில் பூசை வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த வழிபாட்டில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், முன்னாள் வடமாகாண விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் யூட்சன், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் இ.ஜெகதீசன் மற்றும் ஆலய நிர்வாகத்தினர் எனப் பலரும் கலந்துகொண்டு பொலிஸ் மற்றும் இராணுவ புலனாய்வாளர்களின் கண்காணிப்புக்கு மத்தியில் சிவவழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பணவீக்கம் 5.5% ஆக உயர்வு

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் (CCPI) அடிப்படையில் கணக்கிடப்படும் வருடாந்த பணவீக்கம்...

பசில் ராஜபக்சவை கைது செய்ய உத்தரவு

2014 ஆம் ஆண்டு ஊவா மாகாண சபை தேர்தல் பிரசாரத்தின் போது...

முக்கிய அமைச்சின் செயலாளர் இராஜினாமா!

போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில...

அன்று நடந்த சம்பவம் ஒன்று!

இது 2022 ஏப்ரல் மாதத்தின் கடைசி வாரத்தில் நடந்த சம்பவம் என...