ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு – நாளை விசாரணை

Date:

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக சட்டத்தரணி அருண லக்சிறி தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மனுவை மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் பரிசீலிப்பதற்கு உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது

இதன்படி நாளை 15 ஆம் திகதி குறித்த மனுபரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது

ஜனாதிபதித் தேர்தலை இடைநிறுத்த உத்தரவிடுமாறு கோரியும் 19 ஆவது திருத்தத்தை முறையாக நிறைவேற்றுவதற்கு பொதுவாக்கெடுப்பு நடத்துமாறும் கோரியும் சட்டத்தரணி அருண லக்சிறி உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

சட்டத்தரணி அருண லக்சிறி உயர் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மனுவில், தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அதன் உறுப்பினர்கள், நாடாளுமன்ற பொதுச் செயலாளர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தின் ஊடாக, ஒரு வருடத்திற்கு பின்னர் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்றத்தை கலைக்கும் ஜனாதிபதியின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் அரசியலமைப்பின் 70 ஆவது சரத்து திருத்தப்பட்டுள்ளதாக மனுதாரர் கோரியுள்ளார்.

இந்த திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு மூலம் அங்கீகாரம் கிடைத்துள்ளதாலும் ஜனாதிபதி கையொப்பமிடாதமையால் இந்த திருத்தத்தை சட்டமாக கருத முடியாது என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் 19 ஆவது திருத்தச் சட்டத்தை தொடர்ந்தும் சட்டமாக ஏற்றுக்கொள்வது தவறானது என மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நிலையிலேயே நாளை குறித்த மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பணவீக்கம் 5.5% ஆக உயர்வு

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் (CCPI) அடிப்படையில் கணக்கிடப்படும் வருடாந்த பணவீக்கம்...

பசில் ராஜபக்சவை கைது செய்ய உத்தரவு

2014 ஆம் ஆண்டு ஊவா மாகாண சபை தேர்தல் பிரசாரத்தின் போது...

முக்கிய அமைச்சின் செயலாளர் இராஜினாமா!

போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில...

அன்று நடந்த சம்பவம் ஒன்று!

இது 2022 ஏப்ரல் மாதத்தின் கடைசி வாரத்தில் நடந்த சம்பவம் என...