ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க பயணித்த வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது.
ஜாவத்த பகுதியில் உள்ள சலுசலாவிற்கு அருகில் அவர் பயணித்த ஜீப் காருடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் பாராளுமன்ற உறுப்பினர் உட்பட மூவர் காயமடைந்து நாரஹேன்பிட்டியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.