ஜனாதிபதி தேர்தலுக்கான பிரதான அரசியல் கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனம் இம்மாத இறுதிக்குள் முன்வைக்கப்படவுள்ளது என நம்பகரமான அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
இதற்குரிய ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக இடம்பெற்றுவருவதுடன், பல்துறைசார் பிரதிநிதிகளின் ஆலோசனைகளும் உள்வாங்கப்பட்டுள்ளன.
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்கவின் தேர்தல் விஞ்ஞாபனம் எதிர்வரும் 26 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுன பெரமுன கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் செப்டம்பர் முதல் வாரம் வெளியிடப்படும் என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச மற்றும் சுயாதீன வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தேர்தல் விஞ்ஞாபனங்களும் மாத இறுதிக்குள்