அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரின் பணிப்பகிஷ்கரிப்பு இன்று (23) மூன்றாவது நாளாகவும் தொடர்கின்றது.
இடமாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் நேற்று முன்தினம் (21) முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
எவ்வாறாயினும் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் எவ்வித இடையூறுமின்றி சேவை முன்னெடுக்கப்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.